யாழ்ப்பாணம் -சென்னை விமானகட்டணம் குறையவுள்ளது-அமைச்சர் டக்ளஸ்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளிடம் விமான நிலைய வரியாக பெருந்தொகை பணம் அறவிடப்படுவதாக கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சின் ஊடக பிரிவு வெளியிடுள்ள அறிக்கையில், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பயணங்களை மேற்கொள்வோருக்கான விமான நிலைய வரி ஆறாயிரம் ரூபாயாக இருக்கின்ற நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளிடம் இருந்து பன்னிராயிரம் ரூபாய் அறிவிடப்படுகின்றது.
இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமானநிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான ஒருவழி விமானசீட்டு 4000-5000 இந்தியா ரூபாயாக உள்ளநிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கான ஒருவழி பயணசீட்டு 8,000-9000 இந்திய ரூபா வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. இது சென்னை மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களில் அறவிடப்படும் வரியை விட , யாழ்ப்பாணம் விமானநிலையத்தில் அறவிடப்படும் கூடுதல் வரி காரணமாகவே இந்த அதிகரிப்பு உள்ளதாக தெரியவருகிறது