Thu. Oct 8th, 2026

யாழ்ப்பாண மெய்வல்லுனர் போட்டியில் சென் ஜோன்ஸ் மற்றும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவர்கள் சாதனை

யாழ்ப்பாணம் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி பாடசாலைகள் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் பிரிவில் சென் ஜோன்ஸ் கல்லூரி முதலாம் இடத்தையும், யாழ் இந்துக் கல்லூரி இரண்டாம் இடத்தையும், சென் பற்றிக்ஸ் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

பெண்களுக்கான போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி முதலாம் இடத்தையும், வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை இரண்டாம் இடத்தையும் யாழ் இந்து மகளிர் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed