Fri. Mar 21st, 2025

யாழ்ப்பாண மாவட்ட செயலரின் மகன் மது போதையில் அரச வாகனம் செலுத்தி விபத்து

யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபனின் மகன் மது போதையில் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர்.

அரச வாகனம் விபத்துக்குள்ளான போது, யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரோ அவரது சாரதியோ பயணிக்கவில்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

வாகனத்தை செலுத்தியவர் மதுபோதையிலிருந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபுறத்திலிருந்த மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. விபத்தின் போது வீட்டின் முன்பாக நிறுத்திவைத்திருந்த மோட்டார் சைக்கிள் சேதத்துக்குள்ளாகியது.

மாவட்ட செயலாளரின் மகன், தந்தையின் வாகனத்தை செலுத்திச் சென்றதாகவும் அவரது நண்பர் படுகாயமடைந்த்தாகவும் சம்பவ இடத்தில் தெரிவிக்கப்பட்டது.

விபத்தையடுத்து அங்கு விரைந்த மாவட்ட செயலாளர் மகனை அழைத்துச் செல்ல முற்பட்ட போது பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.

விபத்தில் வாகனத்தை செலுத்திச் சென்ற மாவட்ட செயலரின் மகன் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், சாரதி இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த ஆதியின் நண்பர் கடும் காயங்களுக்கு உள்ளானதுடன், அவரது கால்கள் வாகனத்தினுள் சிக்குப்பட்டமையால், சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னரே அவர் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த வாகனம் மாவட்ட செயலரின் உத்தியோகபூர்வ வாகனம் எனவும், அதனை சாரதி இன்றி மாவட்ட செயலரின் மகனே செலுத்தி சென்று விபத்துக்குள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்