Fri. Jan 17th, 2025

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம் பெற்றுள்ளார்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக 2024.11.28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

மேற்படி விடயம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கெளரவ போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன அவர்களினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கெளரவ அமைச்சர் அவர்களுக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரதியிடப்பட்ட 2024.11.28 ஆம் திகதிய கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்