யாழ்ப்பாண புலனாய்வு பிரிவினரின் அதிரடி நடவடிக்கையால் வடமராட்சி பகுதியில் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாண புலனாய்வு பிரிவினரின் அதிரடி நடவடிக்கையால் வடமராட்சி பகுதியில் கஞ்சா மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
வடமராட்சி கிழக்கு பகுதியில் 85 கிலோ கிராம் நிறை கொண்ட கஞ்சா இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மருதங்கேணி பொலீஸாரும் இணைந்து நடாத்திய நடவடிக்கையில் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி ஆழியவளை கடற்கரை பகுதியில் 40 பொதிகள் கொண்ட 85 கிலோ கிராம் நிறை கொண்ட சுமார் 17 மில்லியன் மதிப்பு கொண்ட கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக இந்தியாவில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டு எடுத்து வரப்படுவதாக புலனாய்வு தகவல் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.