யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி டெங்கு நோயினால் உயிரிழப்பு .!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி டெங்கு நோயினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்
யாழ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலையை கற்கும் குணரத்தினம் சுபீனா வயது 25 டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார் இவரின் சிறு வயது உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.