யாழ்ப்பாண கல்லூரி ரூபிகா தேசிய மட்ட கோலூன்றி பாய்தலில் வெள்ளிப் பதக்கம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் யாழ்ப்பாண கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ. ரூபிகா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் யாழ்ப்பாண கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.ரூபிகா 2.60 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.