யாழ்ப்பாணம் வந்தாா் புதிய இராணுவ தளபதி. 92 வீத காணியை கொடுத்துவிட்டாரம்.
இலங்கை இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆலய வழிபாட்டில் ஈடுபட்டதுடன், ஆளுநா் மற்றும் இராணுவத்துடன் பேச்சு நடத்தவுள்ளாா்.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வந்த இராணு தளபதி நல்லுாா் கந்தசுவாமி ஆலயம், மற்றும் ஆாியகுளம் நாகவி காரை ஆகியவற்றில் வழிபாடுகளை நடாத்தியதுடன்,
நல்லை ஆதீன குரு முதல்வா் மற்றும் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் ஆகியோரை சந்தித்து கலந்துரை யாடினாா். இதனை தொடா்ந்து பலாலியில் இராணுவத்தினருடனும்
சந்திப்பினை அவா் மேற்கொண்டாா். இதற்கிடையில் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் ஊடகங்களை சந்தித்த அவா் யாழ்.மாவட்டத்தில் 92 வீதமான காணிகளை மக்களிடம் கொடுத்துவிட்டோம்.
மீதமாகவுள்ள 8 வீதம் காணியில் பாதுகாப்பு தேவைக்கானது தவிா்ந்த மற்றயவற்றை மக்களுக்கு வழங்குவோம் என்றாா்.