Thu. Apr 24th, 2025

யாழ்ப்பாணம் பெரிய பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக உள்ள குளம் சுத்தப்படுத்தும் செயற்பாடு

யாழ்ப்பாணம் பெரிய பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக உள்ள குளம் சுத்தப்படுத்தும் செயற்பாடு நடைபெறவுள்ளது.

இதில் ஆர்வமான அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சுத்தமான பெருங்கடல் படை மற்றும் எதிர்கால சுற்றுச் சூழல் கழகமும் இணைந்து அறிவித்துள்ளனர்.

நாளை மறுதினம் மார்ச் 22 ஆம் திகதி உலக நீர் தினத்தை முன்னிட்டு, சுத்தமான பெருங்கடல் படை(Clean Ocean Force) மற்றும் எதிர்கால சுற்றுச்சூழல்  கழகம் இணைந்து, நீர் மற்றும் நீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக உள்ள குளம் சுத்தம் செய்யும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்