Sat. Apr 11th, 2026

யாழ்ப்பாணத்திற்கு எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்து வரப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்திற்கு எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) 3729 எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாகவும், நாளை 1716 எரிவாயு சிலிண்டர்களும், நாளை மறுதினம்  2217 எரிவாயு சிலிண்டர்களும் எடுத்து வரப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார். மேலும், கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர்கள் எடுத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் மக்கள் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதுடன் மேலதிகமாக எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைக்கத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed