யாழ்ப்பாணத்தின் பல பகுதிகழும் இன்று கர்த்தாலால் முடங்கியுள்ளது. அவசர வேலைகளை செய்யமுடியாமல் மக்கள் தவிப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், சர்வதேசத்துக்கு இதனை வெளிப்படுத்தும் வகையிலும், வடக்கில் எழுக தமிழ் நிகழ்வுடன் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நகரம் , பருத்தித்துறை , நெல்லியடி , சாவகச்சேரி மற்றும் குடா நாட்டின் பல பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை என தெரியவருகின்றது . சந்தைகள் மற்றும் தனியார் பஸ் சேவைகழும் இயங்கவில்லை. பாடசாலைகள் நடைபெறும் என நேற்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்திருந்த போதிலும் மாணவர்களின் வரவு மிகக்குறைவாகவே இருந்து. அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் வரவு மிகவும் குறைவாக உள்ளது.
இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்ட்டுள்ளதுடன் வைத்தியசாலை போன்ற அவசர வேலைகளுக்கு செல்பவர்கள் போக்குவரத்துக்கு நெருக்கடியான நிலையில் உள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது