யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆண்டு கால வரலாற்றின் ஆவணப்படம் யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்களால் நாளை வெளியீடு
யாழ்ப்பாணக்கல்லூரியின் 200ஆண்டு கால வரலாற்றின் ஆவணப்படம் யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்களால் எழுத்துருப்பெற்று நெறியாள்கை செய்யப்பட்டு நடிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை 6 மணிக்கு யாழ்ப்பாணக் கல்லூரியில் திரையிடப்படவுள்ளது. இது முழுமையான மாணவர் படைப்பு என்பதனால் அவர்களின் முயற்சியை வலுவடைய வைக்கவும், எமது கலை அழிந்து விடாது பாதுகாக்கவும், நம்பிக்கையை ஊட்டும் வகையில் அனைவரும் அணிதிரண்டு பார்த்து மகிழ வேண்டும். இது வரலாற்று ஆவணப்படம் மிசனரிமாரின் வருகையும், ஈழத்தில் கல்விக்கான விதைப்பும் அது எவ்வாறு பரிணமித்து இன்று விருட்சமாக யாழ்ப்பாணக்கல்லூரி மிளிருகின்றது என்பதை மிசனரிமாரின் வேடம்தாங்கியும் ஏனைய கதாப்பாத்திரங்களையும் செம்மையான முறையில் செழுமையாக கல்லூரியின் மாணவர்கள் மிகப் பிரமாண்டமாக நடித்து உங்கள் கண்களுக்கு விருந்தாகவும் சிந்தனைக்கு மருந்தாகவும் வரலாற்றுக்கு வழிகாட்டியாகவும் படைத்துள்ளனர். அவர்களின் கன்னிமுயற்சி வாகைசூட பார்த்துமகிழ அனைவரும் யாழ்ப்பாணக் கல்லூரியை நோக்கி அணி திரளுங்கள் என பலரும் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.