யாழ்பாணம் செல்லவுள்ள கோத்தபய மற்றும் மஹிந்த, வரவேற்குமா யாழ்ப்பாணம்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் யாழ்பாணம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருவரும் தனி தனியாக தங்கள் குழுக்களுடன் பிரயாணம் செய்யவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இந்த விஜயம் இந்த மாத இறுதியில் இடம்பெறும் என்றும் முதலில் மஹிந்த ராஜபக்ச தனித்து அணியினருடன் விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என்றும், அதன் பிற்பாடே கோத்தபாய ராஜபக்ச தனது குழுவுடன் பயணம் செய்வார் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நீண்ட கால இடைவெளிக்கு பிறகு ராஜபக்ச சகோதரர்கள் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்ச வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது யாழ்நகரில் வெடிகொளுத்தி கொண்டாடபட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யாழ் மக்களின் வரவேற்பு எவ்வாறு இருக்கும் என்பது அறிய கோத்தபாய மட்டுமல்லாமல் ஐக்கிய தேசிய கட்சி கூட ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் என்பது திண்ணம்