Thu. May 1st, 2025

யாழின் அபிவிருத்தி!! -ரணில் தலமையில் உயர்மட்ட கூட்டம்-

யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடந்து வருகின்றது.

எதிர்வரும் காலத்தில் செய்யப்பட்ட உள்ள அபிவிருத்தி தொடர்பில் இக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

இக் கூட்டத்தில் வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுத்தீன், இராங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வடமாகாண சபையின் பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலுல் வடமாகாண திணைக்களத்தின் செயலாளர், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலனெ கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்