மோட்டாா் சைக்கிள் மதகுடன் மோதி விபத்து. ஒருவா் கவலைக்கிடம், ஒருவா் படுகாயம்.
வவுனியா- தவசிகுளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞா்கள் படுகாயமடைந்துள்ள துடன் ஒருவா் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இன்று மாலை தவசிகுளத்திலிருந்து கோவில்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தவசிகுளம் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் சென்று கொண்டிருந்தபோது
வீதியின் அருகே இருந்த மதகுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 19, 21 வயதுடைய மகாறம்பைகுளம் மற்றும், கோவில்குளம் பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்கள்
படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன் இருவரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.