Sat. Sep 23rd, 2023

மோட்டார் சையிக்கிளின் அதி வேகம் தந்தை உயிரிழப்பு இரு பிள்ளைகள்  படுகாயம் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றம்

 

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை உயிரிழந்துள்ளதுடன் இரு பிள்ளைகள் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் சற்று முன்னர் நாவல எலகரா வீதியில் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் இரு பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு வேகமாகப் பயணித்த தந்தை வீதி வளைவில் வளைய முற்பட்ட போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துள்ளாகியது. இதில் படுகாயமடைந்த மூவரையும் பக்கமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்துள்ளதுடன் 10 மற்றும் 14 வயதுடைய பிள்ளைகள் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்