Sat. Sep 7th, 2024

மோடியின் அரசாங்கத்தில் பொருளாதார வீழ்ச்சி

மோடியின் அரசாங்கம் பழிவாங்கலில்தான் அதிக கவனம் செலுத்துகிறதே ஒழிய நிர்வாகத்தில் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாடியுள்ளார்

காரைக்கால்- காசாகுடியில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாராயணசாமி மேலும் கூறியுள்ளதாவது, “மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் 9% ஜி.டி.பி வளர்ச்சி இருந்த நாடு, இந்த 4 மாதத்தில் 5 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என இப்போது ஆட்சியிலுள்ள அனைவருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் ஒருபோதும் இல்லை.

தங்களுக்கு எதிரான அரசியல் கட்சித் தலைவர்களை, எப்படிப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேலை செய்கிறார்களே , நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதில்லை” என கூறினார் ..

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்