Fri. Jan 17th, 2025

மோசமான காலநிலை , மீனவர்களை கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை

இன்று நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான காற்றுவீசும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது . குறிப்பாக களுத்துறை இரத்தினபுரி, மற்றும் தருகோணமலை மாவட்டங்களிலும் வடமத்திய மாகாணத்திலும், , மத்திய மலைநாட்டிலும் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல் பயணங்களை இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேநேரம், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மவட்டங்களிலும் 100 மில்லமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்