மொஹமட் சஹரானுடன் பயிற்சி பெற்றதாக கருதப்படும் மூவர் கைது
அம்பாந்தோட்டையில் ஆயுதப் பயிற்சி பெற்ற ஜமா அத்மே மிலத்தே இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பல மக்களின் உயிரைக் காவு கொண்ட மொகமட் சஹ்ரானுடன் பயிற்சி பெற்றதாக கருதியே அவரைக் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் மூவரையும் அம்பாறைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.