Wed. Apr 23rd, 2025

மொட்டு சின்னத்தில் மாற்றம் இல்லை -ராஜபக்சக்கள் விடாப்பிடி , ஆதரவு அளிக்குமா சுதந்திரகட்சி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் மொட்டு சின்னத்தின் கீழ் போட்டியிடுவது உறுதியானது என்று அதன் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலனறுவை மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்றின் போதே இதனை அவர் தெரிவித்தார்.
பொதுஜன முன்னணிக்கும் , சுதந்திர கட்சிக்கும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதிலேயே பிரச்சினை இருந்து வருகின்றது. பொது சின்னம் குறித்து சுதந்திர கட்சி வலியுறுத்தி வருகையில், தமது கட்சி சின்னமான மொட்டு சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று பொதஜன முன்னணியும் வலியுறுத்தி வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு மஹிந்த மைத்திரி சந்திப்பும் இது குறித்தே இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன. இந்த நிலையில் ராஜபக்சவின் இந்த அறிவிப்புமூலம் சுதந்திர கட்சியுடனான கூட்டணி மேலும் சிக்கல் அடையும் போல் உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மேலும் பலரை சுதந்திர கட்சியில் இருந்து ராஜபக்சக்கள் தங்கள் பக்கம் இழுப்பார்கள் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்