மைத்திரி -மஹிந்த நேற்று இரவு திடீர் சந்திப்பு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நேற்று இரவு கொழும்பில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகச் செயலாளர் ரோஹன் வெலிவிதா இந்த தகவலை கொழும்பு ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தினார்
ஜனாதிபதிக்கும் எதிர்கட்சி தலைவருக்கும் இடையிலான சந்திப்பு மிகவும் தனிப்பட்டதாக இருந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஜனாதிபதி சிறிசேனவின் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்திலேயே இடம்பெற்றதாகவும், இருவரும் ஜனாதிபதித்தேர்தலுக்கான கூட்டணி குறித்தும் , இரண்டு கட்சிகளின் பேச்சுவார்த்தைகளின் நிலை தொடர்பாக ஆராய்ந்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன
சுதந்திரக் கட்சியும், இலங்கையின் பொதுஜன முன்னணியும் 7 வது சுற்று பேச்சுவார்த்தையை நேற்று (27) நடத்தினர். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஊடகங்களுடன் பேசிய கட்சி பிரதிநிதிகள், ஜனாதிபதி சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் எதிர்காலத்தில் சந்திப்பார்கள் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது