மஹிந்தவின் வேண்டுகோளுக்கு இணங்க மைத்திரி மஹிந்த நேற்றிரவு திடீர் சந்திப்பு ,
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்றிரவு மிக முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சுதந்திர கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமையவே , இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் இதன்போது கூட்டணி ஒன்றைக் கட்டியெழுப்புதல் மற்றும் கூட்டணியின் சின்னமாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சின்னம் இருப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் பல முக்கிய விடயங்கள் குறித்தும் இதன்போது இரண்டு தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது