மைத்திரி-மஹிந்த இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இந்த வாரம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையேயான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இந்தவாரம் இடம்பெறலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
எதிர் கட்சி தலைவரின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போதே இதனை குறிப்பிட்டார்.
மேலு குறிப்பிட்ட அவர் , பொது எதிர் கட்சியில் உள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்து புதிய கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் , இந்த கூட்டணி ஜனாதிபதி தேர்தலுக்கான வேம்புமனு தாக்குதல் செய்யமுன் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்