Wed. Sep 18th, 2024

மைத்திரியின் அதிரடி நடவடிக்கை!! மஹிந்த, ரணில் தரப்பில் சிலரை கைது செய்ய திட்டம்!!

எதிர்வரும் 2 வாரங்களில் கொழும்பு அரசியலில் திடீர் திருப்பங்கள் பலவற்றை எதிர்பார்க்க முடியும் என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரத் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாபதிதபி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மனத்திற்கு அமைய பிரதான அரசியல் கட்சிகள் இரண்டினதும் முக்கியஸ்தர்கள் சிலர் எதிர்வரும் வாரங்களில் கைது செய்யப்பட உள்ளனர் என்றும் தகவல்கள் மேலும் வெளியாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்ச தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க மாட்டார் என்பதனை பொய்ப்பிக்கும் வகையில் தாமரை கோபுர ஊழல் மோசடிகள் விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

பிணைமுறி மோசடிகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதி முக்கிய புள்ளிகள் சிலரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்கள் சிலரும் கைது செய்யப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்வதற்கு தேவையான சகலவிதமான சட்ட ஆவணங்களையும் ஜனாதிபதி தனது வசம் வைத்திருப்பதாகவும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பார் எனவும் சிங்கள இணைய தளமொன்று ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி எதிர்வு கூறியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்