மைக்கல் நேசக்கரம் ஊடாக பசுமாடும் கன்றும் வழங்கி வைப்பு

நான்கு பிள்ளைகளுடன் வறுமையில் வாழும் பெண்ணுக்கு ரூபா 130,000 பசு மாடும் கன்றும் வழங்கி வைப்பட்டது.
மாலைசந்தி மைக்கல் நேசக்கரத்தின் ஊடாக இந்த முன்மாதிரியான செயல் நடைபெற்றது.
மானிப்பாய் பகுதியில் கணவர் பிரிந்து சென்ற நிலையில் நான்கு பிள்ளைகளுடன் வறுமையில் வாழ்ந்து வரும் பெண் வாழ்வாதார உதவி கோரியிருந்தார்
அதற்கு அமைவாக மைக்கல் நேசக்கரம் ஊடாக கட்டார் நாட்டில் வாழ்ந்து வரும் அன்பர் முன்வந்து வழங்கிய ரூபா 130,000 நிதியில் மாடு கொள்வனவு செய்யப்பட்டது.
பயனாளியின் தெரிவுக்கு அமைவாக பசு மாடும் கன்றும் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.