மைக்கல் நேசக்கரத்தின் 7ம் ஆண்டு நிறைவு விழாவும் இளம் வயதில் உயிர்நீத்த மைக்கல் மைந்தர்களின் அஞ்சலி நிகழ்வும்

மைக்கல் நேசக்கரத்தின் 7ம் ஆண்டு நிறைவு விழாவும் இளம் வயதில் உயிர்நீத்த மைக்கல் மைந்தர்களின் அஞ்சலி நிகழ்வும் நாளை சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மாலை சந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மைக்கல் நேசக்கரம் மற்றும் மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தங்கவடிவேலு வேணுகாணன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யா/அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய அதிபர் கிட்டிணன் சிறிகாந்தராசா, கரவெட்டி பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் சிவகுமார் மயூரன், சமூக சேவையாளர் சபாரத்தினம் நாராயணஞானம் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக கிளி/சிவபாதகலையகம் அ.த.க.பாடசாலை ஆசிரியர் திருமதி. பிரதீபா ஸ்ரீகாந்தன், நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியர் திருமதி சுஜித் சுதா, நெல்லியடி ஜீமத் அபாகஸ் இயக்குனர் திருமதி. சதீஸ் மிதுஷா, பருத்தித்துறை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. பூங்குன்றன் நிருஷாராணி ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.