Fri. Mar 21st, 2025

மூளைக் கொள்ளளவையும் நல்ல பழக்கவழக்கங்களையும் கட்டியழுப்பும் விளைநிலங்களே முன்பள்ளிகள் – மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவிப்பு

மூளைக் கொள்ளளவையும் நல்ல பழக்கவழக்கங்களையும் கட்டியழுப்பும் விளைநிலங்களே முன்பள்ளிகள்.
மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவிப்பு
மூளையைத் தூண்டி அதன் கொள்ளளவையும் நல்ல பழக்கவழக்கங்களையும் கட்டிவளர்க்கும் விளைநிலமாக இருப்பதே முன்பள்ளிக் கல்வியின் நோக்கமாகும். அதற்கேற்ற பயிற்சிகளை பல்வேறு விளையாட்டுகளூடாக பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும். என மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் குறிப்பிட்டுள்ளார்.
பூநகரி பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான கருத்தமர்வொன்று முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் தலைமையில் மழலைகள் முன்பள்ளியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றபோது அதில் வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலுந்தெரிவிக்கையில், முன்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கல்வித்தரங்களை திறந்த பல்கலைக் கழகங்கள்,பல்கலைக் கழகங்களினால் நடத்தப்படும் டிப்புளேமா கற்ககைகளைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் நடத்தை, உளவியல் மற்றும் கற்றல் நுட்பங்கள் குறித்து அவர்கள் தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
பிள்ளைகள் குடும்பத்திலிருந்து சமூகமயமாகும் முதலாவது நிறுவனம் முன்பள்ளியாகும்.
இங்கு பிள்ளைகளின் மூளைவர்ச்சியிலும் ஆளுமை வளர்ச்சியிலும் அதிக கவனஞ்செலுத்தவேண்டும். வளர்ச்சி விருத்தி்கேற்ப சமபல உணவை நாளாந்தம் வெவ்வேறு வகைகளில்  வழங்குவதோடு சமையலறைச் சுகாதாரம் சமையலாளரின் கையாளுகை என்பனவற்றையும் சரியாக உறுதி செய்யவேண்டும்.
ஒரு பிள்ளைக்கு குறைந்தது நாற்பது முதல் ஐம்பது சதுர அடிவரையான இடவசதியும் பதினைத்து பிள்ளைகளுக்கு ஒரு மலசல கூடமும் என கருத்திற்கொள்ளப்பட வேண்டியதோடு போதிய தூய்மையான குடிநீர்,ஆபத்தற்ற கட்டட தளபாட வசதிகள் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தாத விளையாட்டு உபகரணங்களும் நிறுவப்படவேண்டும்.
கழிவுகளை வகைப்படுத்தி இடுதல், தற்சுகாதாரப் பழக்கங்களை விருப்போடு கைக்கொள்ளுதல், தன்னை அறிமுகப்படுத்துதல், கட்டளைகளுக்கு சரியான துலங்கலைக் காண்பித்தல், புதிதாகச் சிந்தித்தல், உயிர்களை நேசித்தல், கருத்துக்களை தெரிவித்தல், கலை நிகழ்வுகளிலும் விளையாட்டுகளிலும் பங்குபற்றுதல் போன்றவற்றுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்தல் வேண்டும் என்றார்.
இந்தக் கருத்தரங்கில் பிரதேச செயலக முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர்,பிரதேசசபை உத்தியோகத்தர், பிரதேச பொது சுகாதார பரிசோதகர் மற்றும் எண்பதிற்கு மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்