Mon. Oct 7th, 2024

மூன்று வேடங்களில் சந்தானம்

 

காமெடியன் வேடங்களில் கலக்கிக்கொண்டிருந்த சந்தானம் தற்பொழுது ஹீரோவாக வலம்வந்து கொண்டிருக்கிறார். கடந்தகாலங்களில் இருந்த காமெடி நடிகர்கள் போலல்லாமல் இவரின் ஹீரோ பிரவேசம் சற்று முன்னேற்றமாக அமைந்துள்ளது. இவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படமுட்பட , ‘சக்க போடு போடு ராஜா’ ‘தில்லுக்கு துட்டு’, , ‘தில்லுக்கு துட்டு 2’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..

தற்பொழுது விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டகால்டி’ படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் டைரக்டர் சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். தற்பொழுது சந்தானத்தின் புது படத்துக்கான படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்திக் யோகி இயக்கவிருக்கும் புதிய படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். கோலிவுட்டில் சந்தானம் இப்போ பிஸியான ஹீரோவாக வலம் வருகின்றார். முதலில் தன சொந்த செலவில் படம் எடுத்து வந்த சந்தானத்தை தயரிப்பாளர்கள் பணம் போடா தயாராகி விட்டதே அவருக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்