Sat. Apr 11th, 2026

மூன்று நாள் காய்ச்சல் 17 வயதுச் சிறுவன் உயிரிழப்பு. அப்பகுதியே பெரும் சோகத்தில்

3நாள் காய்ச்சல் காரணமாக  பாதிக்கப்பட்ட  சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அல்வாய் கிழக்கு   பகுதியைச் சேர்ந்த பிரதீபன் லக்சுதன்  (வயது 17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இவர் காய்ச்சல் காரணமாக
பருத்தித்துறை  ஆதார
வைத்தியசாலையில் கடந்த  திங்கட்கிழமை  அனுமதிக்கப்பட்ட  நிலையில்  மேலதிக. சிகிச்சைக்காக நேற்று புதன்கிழமை மாலை யாழ் போதனா வைத்திய   சாலையில்
அனுமதிக்கப்பட்டார் . இருப்பினும் நேற்றிரவு 10:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்  இவர் மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழகத்தின்  இளம் வீரா்  ஆவார்
சிறுவனின்  தந்தையும் கடந்த 2021 ஆம் ஆண்டு சுகயீனம் காரணமாக உயிரிழந்த நிலையில் தாயாரின் அரவணைப்பில்  வாழ்ந்து வந்த நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed