Thu. Jan 23rd, 2025

முஸ்லீம் பெண்களின் முகத்தை மூடும் ஆடைகளின் மீதான தடை நீக்கம்

நிகாப் மற்றும் புர்கா ஆகியவை உட்பட்ட சகல முகத்தை மூடும் ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் , தற்பொழுது அவசரகால நிலை அமுல்படுத்தப்படவில்லை என்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் அவர்களுக்கு ஒரு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதாக சட்ட, ஒழுங்கு மற்றும் நடத்தை வரம்பு டிஐஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஹலீம், முகத்தை மூடும் ஆடைகள் தடை நீக்கம் குறித்து தனக்கு டி.ஐ.ஜி அஜித் ரோஹனாவிடம் இருந்து கடிதம் கிடைத்ததாக தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 350 க்கு மேற்பட்டோர் பலியானதை தொடர்ந்து இந்த தடை அம்முப்படுத்தபட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு தடைவிதிப்பதற்கான நடவடிக்கையை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்