Sat. Feb 15th, 2025

முஸ்லீம் தீவிரவாதத்தை திடமாக எதிர்கொள்ளக்கூடிய வேட்பாளரை ஆதரவளிப்போம்-ரத்தன தேரர்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லீம் தீவிரவாதத்தை திடமாக எதிர்கொள்ளக்கூடிய வேட்பாளரை ஆதரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் இன்று தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்த நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று கூறிய தேரர் , முஸ்லீம் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தவறியமைக்கு மக்கள் அரசாங்கத்திற்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளராக யார் முன்னிறுத்தப்பட்டாலும், முஸ்லீம் பயங்கரவாதத்தை திடமாக எதிர்கொள்ளக்கூடிய ஒருவருக்கு தான் நாங்கள் எங்கள் ஆதரவை அளிப்போம். மதரஸாக்கள் ஒழிக்கப்பட வேண்டும். விவசாயம், எரிசக்தி மற்றும் கல்வித் துறைகளில் தெளிவான கொள்கை இருக்க வேண்டும், ”என்றார்.

இஸ்லாமிய தீவிரவாதத்தால் அரசாங்கம் அடக்கப்படுவதாகவும், டாக்டர் ஷாஃபி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்தத் தவறிவிட்டதாகவும் ,டாக்டர் ஷாஃபி மீதான விசாரணையில் ஈடுபட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அவருக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்தியதால் மாற்றப்பட்டுள்ளனர். பொலிஸ் மற்றும் பொலிஸ் கமிஷன் மீது நாங்கள் எவ்வாறு நம்பிக்கை வைத்திருக்க முடியும், ”என்றார்.

வடக்கு மற்றும் கிழக்கில் முஸ்லிம்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது, தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது . தமிழ்-சிங்கள நட்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட “நாட்டைப் பாதுகாப்பதற்கான படை (ரதா சுராகினா பலவேகயா)” என்று ஒரு அமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ள கூட்டம் அடுத்த திங்கட்கிழமை (19) மதியம் 2.00 மணிக்கு மட்டக்களப்பு கிரானில் இடம்பெறும் . இந்த சந்திப்பின் போது மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை கையகப்படுத்துமாறும் மற்றும் பல பிரச்சினைகள் பற்றி அரசாங்கத்தை வலியுறுத்தியும் கூட்டம் இடம்பெறும் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்