Thu. Jan 23rd, 2025

முஸ்லிம்கள் எதிர்ப்புக்கு பணியும் அரசு, தமிழரை மீண்டும் கல்வியங்காடு மயானத்தில் கிள்ளு கீரையாக்கியுள்ளது..

இன்றயதினம் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியில், குண்டுத்தாக்குதலை நடத்திய முஸ்லீம் பயங்கரவாதியின் உடல் பாகங்களை அடக்கம் செய்வதற்கு தனக்கு நீதிமன்ற ஆணை ஜூன் மாத ஆரம்பத்தில் கிடைக்கப்பெற்றதாக குறிப்பிட்டார். இதன் பின்னர் கல்வியங்காடு மயானத்தில் அடக்கம் செய்வதற்கு அந்தப்பகுதி கிராமசேவகரை, பிரதேச செயலர் ஊடாக தொடர்புகொண்டபொழுது சமூகப்பிரச்சினை மற்றும் எதிர்ப்பினை கருத்தில் கொண்டு கிராமசேவகரின் ஆலோசனைப்படி அத்திட்டத்தை கைவிட்டதாக குறிப்பிட்டார்.

 

பின்னர் குண்டுதாரி காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த பகுதி பிரதேச சபை தலைவரை தொடர்பு கொண்டபொழுது, அவர் காத்தான்குடி மக்களின் எதிர்ப்பு இருப்பதால் பயங்கரவாதியின் உடல் பகுதியை இங்கு அடக்கம் செய்வதை தான் தடைசெய்வதாக குறிப்பிட்டதாகவும் கூறினார். இதனால் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டு மீண்டும் இந்த முயற்சியை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பாரப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் அரசாங்க அதிபரிடம் அனுமதி கடிதத்தை பெற்று குற்றப்புலனாய்வு பிரிவினர் இரகசியமாக கல்வியங்காடு மயானத்தில் 26 ஆம் திகதி இரவு அடக்கம் செய்துள்ளனர்.

முஸ்லீம் பிரதேச சபை தலைவரின் தடை உத்தரவை வேதவாக்காக எடுக்கும் அரசாங்க அதிபரும் போலீஸ் துறையும் மற்றும் அதிகாரிகளும் , ஏன் தமிழ் மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கணக்கில் எடுக்கவில்லை.
முஸ்லீம் பிரதேச சபை தலைவரால் அடக்கம் செய்வதை தடை செய்கிறோம் என்று சொல்லக்கூடிய பொழுது, ஏன் தமிழ் பிரதேசங்களை சேர்ந்த பிரதேச சபைத்தலைவர்களாலோ , செயலர்களாலோ இதனை தடை செய்வதாக கூற முடியவில்லை.
முஸ்லீம் பிரதேசசபை தலைவர்களுக்கும் மற்றும் செயலர்களுக்கும் இருக்கும் அதிகாரம் தமிழ் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இல்லையா? அல்லது அவர்களுக்கு அந்த அதிகாரத்தை பயன்படுத்த தெரியாதா? இல்லாவிடில் எங்கள் பிரதிநிதிகள் தைரியம் இல்லாத கையாலாகாதவர்களா?

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்