Sun. Oct 6th, 2024

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் மீட்பு

முள்ளிவாய்க்காலில் இருந்து விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறித்த கொடிகள் மற்றும் சீரூடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக முல்லைதீவு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளார்கள் . பொதி செய்யப்பட்ட நிலையில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த இந்த பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது. காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியினை கனரக இயந்திரம் கொண்டு சுத்திகரித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .
முல்லைதீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கிருந்து விடுதலைப்புலிகளின் இரண்டு புலிக்கொடிகளும் மற்றும் இராணுவ சீருடைகள் இரண்டும் இரண்டு தொப்பிகளும் ஆகியவற்றை மீட்டு சென்றுள்ளனர்.
இந்த இராணுவ சீருடைகளில் ஒன்று சிறுவர் ஒருவரின் அளவில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்