முள்ளியவளையில் நடந்த விபத்து..! இருவா் படுகாயம்.
தண்ணீரூற்று, ஆலடிச் சந்தியில் இரு உந்துருளிகள் நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
வீதியின் மறுபக்கம் கடக்க முற்பட்ட உந்துருளியும், எதிரே வந்த உந்திருளியும் ஒன்றையொன்று மோதிய நிலையிலேயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் 26.08.2019 நேற்றைய நாள் மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உந்துருளிகள் ஒன்றையொன்று மோதியதனால், இருபெண்கள் உட்பட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த முள்ளியவளைக் காவற்றுறைப் பொறுப்பதகாரி, மற்றும் வீதிப்போக்குவரத்து கவற்றுறையினர்
விபத்துக்குள்ளான உந்துருளிகளை வீதியில் இருந்து அப்புறப்படுத்தியதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.