Sat. May 16th, 2026

முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களுக்கான மல்யுத்த பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது

தேசிய மல்யுத்த பயிற்றுநர்களினால்
முல்லைத்தீவு மாவட்ட மல்யுத்த வீரர்களுக்கான 2 நாள் மல்யுத்த பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இப்பயிற்சி முகாம் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பிரிவின் ஒழுங்குபடுத்தலுடன் வட மாகாண விளையாட்டு திணைக்கள நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்யுத்த விளையாட்டு திறனை உயர்த்தும் நோக்குடன் மேற்படி மல்யுத்த பயிற்சியானது நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்ப நிகழ்விற்கு ஆரம்ப மற்றும் இறுதி நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி  ச. மஞ்சுளாதேவி அவர்களும்
வித்தியானந்தாந்தா கல்லூரி அதிபர் திரு K.ஜெயவீரசிங்கம்
வடமாகாண  சிரேஸ்ர மாவட்ட  விளையாட்டு உத்தியோகத்தர் திரு  S. சதானந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைத்தனர். இதில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 61 வீர வீராங்கனைகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed