முல்லைத்தீவில் பாாிய மக்கள் எழுச்சி போராட்டம். நீதியை கொன்றவா்கள், கொன்றதை பாா்த்துக் கொண்டிருந்தவா்களை கைது செய்..

நீதிமன்ற உத்தரவை மீறிய பௌத்த பிக்குகளை கைது செய்..! நீதிமன்ற உத்தரவை மீறும்போது பாா்த்துக் கொ ண்டிருந்தவா்கள் மீது நடவடிக்கை எடு..!
என வலியுறுத்தி முல்லைத்தீவில் இன்று காலை வரலாறு காணாத போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டிருக்கின்றது. தமிழர் மரபுப் பேரவை, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்,
சட்டத்தரணிகள் என பொது அமைப்புகளின் அழைப்பில் இந்தப் போராட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் உண்ணாபுலவு வைத்தியசாலைக்கு
முன்பாக ஆரம்பமானது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு சென்று மனு ஒன்றைக் கையளிக்கவுள்ளனர்.
நீதிமன்றக் கட்டளையை அவமதித்த பௌத்த பிக்குகளின் செயலுக்கும் அவர்களுக்கு துணை நின்ற பொலிஸாருக்கும்
எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தும் மனுவே கையளிக்கபடவுள்ளது. அத்துடன், நீதிமன்றக் கட்டளையை
நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்திய பௌத்த பிக்குவுக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.