முல்லைதீவில் வெற்றுக்காணியில் குண்டுவெடிப்பு
முல்லைதீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று பிற்பகல் 6 மணியளவில் காணி ஒன்றில் குண்டு ஒன்று வெடித்துள்ளது.. இதனால் யாருக்கும் எந்த வித சேதங்களும் இடப்பெறவில்லை என்று தெரியவருகின்றது.
காணி உரிமையாளரால் காணியை துப்புரவு செய்து தீமூட்டியதனால் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக கருதப்படுகிறது. குண்டுவெடிப்பு இடம்பெற்று ஒரு மணித்தியாலத்தில் பின் சம்பவ இடத்திற்கு வந்த முல்லைதீவு பொலிஸார் , குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள் .