Mon. Dec 9th, 2024

முறைப்பாடு கொடுக்க பொலிஸ் நிலையம் சென்றுவந்தவா் மீது கத்திக் குத்து.

காத்தான்குடி கல்லடிநொச்சிமுனை பகுதியில் ஹோட்டல் ஒன்றுக்குள் புகுந்த காடையா்கள் ஹோட்டலை அடித் து நொருக்கியதுடன் ஹோட்டல் முகாமையாளரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த உல்லாச விடுதியில் கடமையாற்றிய ஊழியர் ஒருவரின் செயற்பாடு காரணமாக

அவரை கடந்த வாரம் கடமையிலிருந்து நிர்வாகம்  அவரை நிறுத்தியுள்ளது. இதனையடுத்து குறித்த ஊழியர் முகாமையாளரை கொலை செய்வதாக தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்

இதனையடுத்து முகாமையாளர் முறைப்பாடு செய்வதற்கு பொலிஸ் நிலையத்துக்கு சென்றபோது  பொலிசார் ஒரு மணித்தியாலயத்தின் பின்வருமாறு தெரிவித்தனர்.

இதனையடுத்து முகாமையாளர் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பிவந்துள்ளார் இந்த நிலையில் குறித்த ஊழியர் சுமார் 8 பேருக்கு மேற்பட்ட இளைஞர்களுடன்

கத்தி மற்றும் இரும்பு கம்பி சைக்கிள் செயின் போன்ற ஆயுதங்களுடன் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சம்பவதினமான நேற்று பகல் 11 மணியளவில்

குறித்த ஹோட்டலுக்குள் நுழைந்து முகாமையாளரை கத்தியால் குத்தியதில் முகாமையாளர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். என பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்