Thu. May 21st, 2026

முறிகண்டியில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் விபத்தானதில் இளைஞர் பலி

முறிகண்டியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்து சம்பவதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று இரவு 8.45 மணியளவில் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் சாந்தபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சுப்பையா தர்ஷன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed