முப்பாய்தலில் கரவெட்டி பிரதேச செயலக வீராங்கனை பபிஷாளினிக்கு தங்கம்

யாழ் மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான முப்பாய்தல் போட்டியில் கரவெட்டி பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வி. பபிஷாளினி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
யாழ் மாவட்ட செயலகம் நடாத்தும் யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான முப்பாய்தல் போட்டியில் கரவெட்டி பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வி. பபிஷாளினி 10.11 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், சங்கானை பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வை.நிருஷா 9.56 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும், யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த என்.ஆன்மேரி 9.53 வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.