முன்பள்ளி மாணவர்கள் சென்ற பேரூந்து 6 வாகனங்களுடன் விபத்து
முன்பள்ளி மாணவர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பேரூந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஆறு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் கண்டி கொழும்பு வீதியில் இடம்பெற்றது.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி முன்பள்ளி சிறார்களை ஏற்றிச் சென்ற பேரூந்து இன்னுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது கயஸ் வானுடன் விபத்துக்குள்ளானதுடன் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து மேலும் 5 வாகனங்களுடன் விபத்துக்குள்ளானது.
இதில் கயஸ் வான் சாரதி காயத்திற்கு உள்ளாகினார்.பேரூந்து சாரதியை பொலீஸார் கைது செய்துள்ளனர்.