முன்னிலை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவ!!
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிலை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவவின் பெயர் அறிவித்துள்ளது.
அக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்தார்.
அரசியல் அங்கிகாரம் பெற்ற சிவில் அமைப்புக்கள், இடதுசாரிகட்சிகள் அனைத்ததையும் ஒன்றுப்படுத்தி உத்தேச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து தரப்பினரின் கொள்கைகளையும் உள்ளடக்கியதாக கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று நாட்டு மக்கள் பழமையான அரசியல் நிர்வாகத்தை வெறுக்கும் அளவிற்கு அரசியல் ரீதியில் விரக்தியடைந்துள்ளார்கள். புதிய மாற்றத்தை நோக்கிய பயணமாகவே இத்தீர்மானம் காணப்படும்.கட்சியின் தேசிய மாநாடுகள் இனிவரும் நாட்களில் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் இடம் பெறும். என்றார்.
எவ்வாறு இருப்பினும் இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகளுடன் போட்டிப் போடும் விதத்தில் சிவில் அமைப்புக்களும், மறுபுறம் சுயாதீனமாக போட்டியிட தீர்மானித்துள்ளன.