Sun. Dec 8th, 2024

முன்னாள் போராளியின் குடும்பம் வாழ்வாதார உதவி கோரல் கணவர் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பு

முன்னாள் போராளியின் குடும்பம் வாழ்வாதார உதவி கோரல் கணவர் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் வசித்துவரும் விக்கினேஸ்வரன் சிவஜோதி என்ற பெண்ணின் கணவர் முன்னாள் போராளி நீண்டகாலமாக போராட்டத்தில் இணைத்து போராடியவர் 2009 ம் ஆண்டு இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார்

பின்னர் 2015 ம் ஆண்டு விடுதலையாகி குடும்பத்துடன் இணைந்தார் கடந்த நான்கு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கடந்த 2019 – 04-23 அன்று உயிரிழந்தார்

மனைவி மூன்று பிள்ளைகளும் எந்த விதமான வருமானமும் இன்றி தற்போது வறுமையில் உள்ளனர் கரைவலை தொழிலுக்கு தற்போது சென்று அதில் கிடைக்கும் சிறு தொகை பணத்தில் வாழ்ந்து வருவதாகவும் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்புக்கும் உதவி செய்யுமாறு கோரியுள்ளனர்

கருணையுள்ளம் கொண்டவர்கள் மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் கருதி உங்களினால் முடிந்த உதவிகளை செய்ய முன்வாருங்கள்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்