முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தினேஷ் சந்திமால் இராணுவத்தில் இணையவுள்ளார்
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஆன தினேஸ் சந்திமால், இராணுவத்தில் இணையவுள்ளார் .சந்திமால் இராணுவத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்ததை அடுத்து, அவருக்கு கௌரக ரீதியில் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர், இராணுவ கிரிக்கட் அணியைப் இனி பிரதிநிதித்துவப்படுத்துவார் என இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார். இவருக்கு கேப்டன் தர பதவி வழங்கப்படலாம் என்று தெரியவருகிறது. இந்த நிலையில் இவர் இராணுவத்தில் இணைவதற்கான நுழைவு பரீட்ச்சையை எழுத்தவுள்ளதாக இராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன
தினேஷ் சந்திமால் இலங்கை அணியில் நீண்டகாலமாக உள்வாங்கப்படாமல் இருக்கும் நிலையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளார்
ஏற்கனவே இந்தியா முன்னாள் கேப்டன் டோனி இராணுவத்தில் இணைந்துள்ளமை தெரிந்ததே.