Mon. May 18th, 2026

முதுமையில் தனிமை வீட்டுத்திட்டத்தை மறுக்கும் அதிகாாிகள், அந்தாிக்கும் மக்கள்.

தனிமையில் வாழும் முதியவா்களுக்கு வீட்டுத்திட்டம் மறுக்கப்படுவதாக கூறும் பாதிக்கப்பட்டவா்கள், போாினால் பாதிக்கப்பட்ட நிலையில் அநாதரவாக வாழ்வதாகவும் கூறுகின்றனா்.

யுத்தத்தன் பின்னரான மீள்குடியமர்வின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறுபட்ட உதவிகள் வழங்கப்படுகின்ற போதும் தனிநபர்களை கொண்ட குடும்பங்கள்

முதியவர்களைக்கொண்ட குடும்பங்களுக்கான உதவிகள் கிடைப்பதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில்

இவ்வாறு மீள்குடியேறி வாழ்ந்து வரும் தனிநபர்களை கொண்ட குடும்பங்கள் முதியவர்களை கொண்ட குடும்பங்கள் தமக்கான உதவிகள் உரியமுறையில் வழங்கப்படுவதில்லை

என்றும் தமக்கான உதவிகளை வழங்குவதில் தங்களை தட்டிக்கழிக்கின்றன என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டுத்திட்டங்களுக்கான பயனாளிகள் தெரிவு செய்யப்படும்

போது புள்ளியிடல் முறையில் மேற்கொள்ளப்படும் தெரிவுகளில் தாங்கள் உள்வாங்கப்;படுவதில்லை என்;றும் ஏனைய வாழ்வாதார உதவிகளுக்கான தெரிவுகளிலும் தாங்கள் உள்வாங்கப்படுவதில்லை

என்றும் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் தனி அங்கத்தவர்கள் அல்லது கணவன் மனைவி அறுபது வயதை தாண்டிவிட்டனர் என தமக்கான உதவிகளை வழங்காது என

தங்களை தட்டிக்கழித்து வருகின்றனர். நாங்களும் இந்த மண்ணில் இருந்து போரினால் பாதிப்புக்களை எதிர்கொண்டு இடம்பெயர்ந்து பிள்ளைகளையும் உறவுகளையும் இழந்து

தனிமனிதர்களாகவும் முதியவர்களாகவும் வாழ்ந்து வருகின்றோம். மீள்குடியேறியபோதும் அமைக்கப்பட்ட தற்காலிக வீடுகளில் நாங்கள் வாழ்ந்துவரும் நிலையில் குறித்த வீடுகள்

முழுமையாகவே சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுவதுடன், குடியிருக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது. எனவே எமக்கு வீட்டுத்திட்டம் உள்ளிட்ட வசதிகளைப்

பெற்றுத்தர உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed