Mon. Oct 7th, 2024

முதியவா்கள் மீது மோதிய இராணுவ வாகனம், லாஸ் கோப்ரல் தர அதிகாாி கைது.

திருகோணமலை கந்தளாய்- தம்பலகாமம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனம் மோதியதில் இரு முதியவா்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவ்விபத்து நேற்றிரவு ஒன்பது முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தம்பலகாமம்- பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த

இப்பவே சித்தரவேல் லோகராணி (52 வயது) மற்றும் முருகேசு சித்தரவேல் (54 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் குறித்து தெரியவருவதாவது

கன்தளாயிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த வாகனம் முச்சக்கர வண்டியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்

இராணுவ வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர் சீனக்குடா இராணுவ முகாமில் கடமையாற்றும்

லாஸ் கோப்பல் அம்பாறை – உஹன பகுதியைச் சேர்ந்த இந்திக்க சதறுவன் அபேகோன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை

இன்றைய தினம் கன்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை

மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்