Fri. Jan 17th, 2025

அமெரிக்கா செல்லவதற்காக டில்லி விமானநிலையத்தில் இளைஞன் செய்த துணிகர ஏமாற்று வேலை

குஜராத்தை சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர் போலி கடவுசீட்டுமூலம் அமெரிக்கா செல்ல முற்பட்டுள்ளார். கடவுசீட்டு 81 வயது முதியவருடையது எனபதால் , முதியவர் போல பெரிய மூக்குக்கண்ணாடி , சீக்கியர் ஆணியும் தலைப்பா என அசலாக உடை உடுத்தி விமானநிலையம் சென்ற இளைஞன் , தன்னால் நடக்கமுடியாது என்று சக்கர நாற்காலி சேவையை பயன்படுத்தி உள்ளே சென்றுள்ளார். அவரில் சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள் , இளைஞனை எழுந்து நீக்குமாறு பணித்துள்ளார்கள். தனது உடல்நிலை காரணமாக தன்னால் எழுந்து நிற்கமுடியாது என்று கூறிய அவரை, ஊழியர்களின் உதவியுடன் எழுந்து நீக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள் . இதன் போது அந்த இளைஞன் எழுந்து நிக்க உதவிய விமானநிலைய அதிகாரி அவரின் வெள்ளை தலைமயிரின் அடிப்பகுதி கறுப்பாக இருப்பதையும் அவரின் கை தோல்பகுதி 81 வயது தோற்றத்தை கொண்டிருக்கவில்லை என்பதையும் கண்டறிந்தார்
இதனால் அவரை மேலதிக விசாரணைக்கு உட்படுத்தியபோது உண்மையை அந்த இளைஞன் ஒத்துக்கொண்டு தனது உண்மையான விபரங்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் செப்டம்பர் 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்