முதல் பெண் படையணி தளபதி மேஜர் சோதியா அவர்களின் தாயார் காலமானார்

தமிழர் விடுதலை போராட்டத்தின் முதல் பெண் படையணி தளபதியான மேஜர் சோதியா அவர்களின் தாயார் இன்று திங்கட்கிழமை காலமானார்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதல்ப் பெண் தளபதி சோதியா அவர்களின் தாயார் மைக்கேல் ராசா மேரி அவர்கள் தனது 84வயதில் நேற்று திங்கட்கிழமை காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நெல்லியடி கொடிகாமம் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் கரவை தேவமாதா ஆலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டு நல்லடக்கத்திற்காக கரவெட்டி சேகமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.