முக்கிய வழக்குகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவு .
ஆறு முக்கிய வழக்குகள் குறித்து முழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்குகளில் முன்னாள் இலங்கை ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் , பத்திரிகையாளர் லசந்தா விக்ரமதுங்காவின் கொலைகளும் மற்றும் பிரகீத் எங்கெலியகொட காணாமல் போன வழக்கும் அடங்கும்.
ஏற்கனவே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையிலேயே இந்த அறிக்கைகளை பொலிஸ்மா அதிபர் கோரியுள்ளார்