முக்கியஸ்த்தா்கள் கொலைசதி..! மருத்துவா் சிவரூபன் பெயாில் வெளியான செய்திகள் பொய் என்கிறது பொலிஸ்.
பளை வைத்தியசாலையின் பொறுப்பதிகாாி கோட்டாபாய ராஜபக்ஸ உள்ளிட்ட முக்கியஸ்த்தா்களின் கொலை சதி தொடா்பான தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
அவ்வாறு அவா்கள் தகவல் வெளியிட்டதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. என பொலிஸ் பேச்சாளா் றுவாண் குணசேகர கூறியுள்ளாா்.
பளை வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி சி.சிவரூபன் அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் ஆறு பேர் கைதாகியிருந்தனர். அத்துடன் ஏ.கே ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் பொலிசார் மீட்டதாக குறிப்பிட்டனர்.
சின்னாமணி தனேஷ்வரன், ரத்னம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னதுரை, வினயகமூர்த்தி நெஜிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு
விசாரணைக்குட்படுத்தப்படடு வந்தனர். இந்த நிலையில் நேற்று (28) டி.எம். நிமலராஜ் மற்றும் ரூபன் ஜதுசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஏழு சந்தேக நபர்களையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்,
டக்ளஸ் தேவானந்தா, கருணா ஆகியோரின் படுகொலை சதி குறித்து அவர்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.